உதயநிதிக்கு நன்றி தெரிவித்த ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை ஒன்று இணைந்து கூட்டாக ஒரு குழு அமைத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்தது.
அந்தக் கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக முதல்வருக்கும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதிக்கும் கூட்டுக் குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழத் திரைப்படத் தயாரிப்பாளகள் நலன் கருதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து “ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு" கடந்த 17ஆம் தேதி அன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தியது. அதில், பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கபபாத வண்ணம், கோவை மாநகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடி இருக்கும் திரையரங்குகள் திறக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடத்தில் ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
எங்களது. கோரிக்கையை கனிவுடன் ஏற்று, தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து தற்போது. கோவை மாநகரில் உள்ள கட்டுபாடுகளை நீக்கி ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளை திறந்துகொள்ளலாம் என்ற அரசாணை வெளியிட்டுருப்பது தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏறபடுததியுள்ளது.
அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினரும், சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும், தமிழ்த் திரையுலகினரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout