பொய்ச்செய்தி பரப்பும் பத்திரிகையாளர்கள் களையெடுக்கப்படுவார்கள்: தயாரிப்பாளர்கள்‌ சங்கம்

  • IndiaGlitz, [Friday,September 22 2023]

பொய்ச்செய்தி பரப்பும் பத்திரிகையாளர்கள் களையெடுக்கப்படுவார்கள் என தயாரிப்பாளர்கள்‌ சங்கம் தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ என்‌.ராமசாமி மற்றும்‌ நிர்வாகிகள்‌ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரையுலகில்‌ நடைபெறும்‌ முக்கிய நிகழ்வுகளை பொதுமக்களின்‌, பாராவைக்கு கொண்டு செல்வதில்‌ முக்கிய பங்குவகிப்பது ஊடகத்துறை. அத்தகைய ஊடகத்துறை தற்போது செயல்பட்டு வருவது, சினிமாத்துறையில்‌, உள்ள கலைஞர்களுக்கு, பெரிதும்‌ தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வகையில்‌, சமீபத்திய நிகழ்வுகளான நடிகர்‌ திருமாரிமுத்து அவர்களது மறைவிலும்‌, தயாரிப்பாளர்‌, இசையமைப்பாளர்‌ திரு.விஜய்‌ ஆண்டனி அவாகளது மகள்‌ மறைவிலும்‌ ஒருசில ஊடககங்கள்‌ நடந்து கொண்டது மிகவும்‌ வருத்தமளிக்கிறது.

சமீபகாலமாக ஒருசிலர்‌ திரைத்துறைப்பற்றி வரைமுறை, இல்லாமல்‌ செய்திகளை பரப்பி வருவதால்‌, அது. விஷயமாக தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள்‌ யூனியனை அழைத்து பேசி இதற்கு ஒரு வரைமுறைப்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளோம்‌.

இதில்‌, சோசியல்‌ மீடியா என்ற பெயரில்‌ தவறான செய்திகளை மக்களுக்கு பரப்பி வருபவர்களை களையெடுக்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்‌. இவ்வாறு, அந்த. அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி.. நம்பிக்கை மோசடி உள்பட  2 பிரிவுகளில் வழக்கு..!

இசைப்புயல் ஏஆர் ரகுமான் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' என்ற நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த போது இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்: தொகுதியை அறிவித்த கமல்ஹாசன்..!

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட போவதாக உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் 'ஜவான்': வாட்ஸ் அப், டெலிகிராமுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

'ஜவான்' திரைப்படத்தின் பிரதியை சட்ட விரோதமாக பகிர்ந்தவர்கள் அடையாளத்தை வெளியிடுமாறு வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டசபையில் மீசையை முறுக்கி தொடையை தட்டிய பாலகிருஷ்ணா.. பதிலடி கொடுத்த ரோஜா..!

ஆந்திர மாநில சட்டசபையில் மீசையை முறுக்கி தொடையை  நடிகர் பாலகிருஷ்ணா தட்டிய நிலையில் அதற்கு அமைச்சரும் நடிகையுமான ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.  

'லியோ' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? 'மாஸ்டர்' 'விக்ரம்' படங்களை விட குறைவுதான்..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.