தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் வைத்த முக்கிய வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழக முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசு அறிவித்துள்ள கலைமாமணி விருது பெரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிலிம் பெடரேஷன் தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு, மற்றும் தயாரிப்பாளர்கள் ஜிரு.ஐசரிகணேஷ், திரு.மனோஜ்குமார், திரு.கெளதம் வாசுதேவ் மேனன், திரு.ஜாகுவார்தங்கம், நடிகரும், தயாரிப்பாளர்களுமான திரு.ராமராஜன், திரு.சிவகார்த்திகேயன், ஆகியோருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், கலைமாமணி விருது பெறும் நடிகர், நடிகையர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ள தமிழக அரசிற்கும், தமிழக முதல்வா் அவர்களுக்கும், துணை முதல்வர் அவர்களுக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் அவர்களுக்கும், இயல் இசை நாடக மன்றத் தலைவர் திரு.தேவா அவர்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேசமயம் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு 2015,2016,2017 ஆண்டுக்கான மானியத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் மானியத்தொகையினை வழங்கி அந்த தயாரிப்பாளர்களின் வாழ்வில் உள்ள இருளை நீக்கி வெளிச்சம் கொடுக்குமாறு தமிழக முதல்வர், துணை முதல்வர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஆகியோரிடம் தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இருகரம் குவித்து கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments