தயாரிப்பாளர் சங்க தேர்தல்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்தஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்தது
இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை ஐகோர்ட் இன்று இதுகுறித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே நடிகர் சங்க தேர்தல் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த தேர்தலாவது நல்லபடியாக முடிந்து நிர்வாகிகள் பதவியேற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments