close
Choose your channels

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றவர் இவர் தான்..!

Monday, May 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலர் வாக்களித்தனர். மொத்தம் நேற்று 1111 உறுப்பினர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னை அடையாறு ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட டி. மன்னன் என்பவரை விட முரளி 150 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தயாரிப்பாளர் சங்க பொருளாளராக தேனாண்டாள் முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த தேர்தலில் இரண்டு துணை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment