தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றவர் இவர் தான்..!

  • IndiaGlitz, [Monday,May 01 2023]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலர் வாக்களித்தனர். மொத்தம் நேற்று 1111 உறுப்பினர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னை அடையாறு ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட டி. மன்னன் என்பவரை விட முரளி 150 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தயாரிப்பாளர் சங்க பொருளாளராக தேனாண்டாள் முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த தேர்தலில் இரண்டு துணை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் பட பெண் தயாரிப்பாளரின் வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ.. உடன் இருக்கும் பிக்பாஸ் நடிகை..!

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த பெண் தயாரிப்பாளர் ஜிம்மில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ

'புஷ்பா' உங்க படத்தோட பட்டி டிங்கரிங் தான்.. ரசிகரின் கருத்தை பதிவு செய்த பிரபல நடிகர்..!

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'புஷ்பா' திரைப்படம் உங்க படத்தின் பட்டி டிங்கரிங் போட்ட படம் தான் என ரசிகர் ஒருவர் பதிவு செய்ததை பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விராத் கோஹ்லி ..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி தனது மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

பிரபல இயக்குனரை 2வது திருமணம் செய்கிறாரா பிக்பாஸ் ரக்‌ஷிதா .. அப்ப ராபர்ட் மாஸ்டர் என்ன ஆச்சு..?

சீரியல் நடிகையும்,  பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரக்‌ஷிதா, இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய போவதாக வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி, கமல் படங்களின் 80களின் நாயகி.. மகனுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த கடந்த 80களின் நாயகி குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் ரயிலாகி வருகிறது.