அவர் வேற , நான் வேற, விஜய்யுடன் இணைந்து பணியாற்ற முடியாது: பிரபல அரசியல் கட்சி தலைவர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்யின் கொள்கைகள் வேறு, என்னுடைய கொள்கைகள் வேறு, எனவே அரசியலில் விஜய்யுடன் இணைந்து பயணம் செய்ய முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நேற்று கல்வி விழாவில் கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியது குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்தியாளர்களிடம் கூறும்போது ’விஜய் அரசியலுக்கு வருவதால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள், விஜய்யின் கொள்கைகள் வேறு, எங்களுடைய கொள்கைகள் வேறு.
எங்களுக்கு இடையே அண்ணன் தம்பி உறவு மட்டும் தான் உள்ளது. நான் பேசியதை தான் தம்பி விஜய்யும் பேசுகிறார் அது எனக்கு தான் வலிமை சேர்க்கும். என் ஓட்டை நடிகர் விஜய்யால் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை, என்னுடைய கொள்கை வேறு அவருடைய கொள்கை வேறு என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments