பிலிம்பேர் விருதுக்கு செல்லும் தமிழ்ப்படங்களின் பட்டியல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருதை அடுத்து திரையுலக நட்சத்திரங்கள் பெரிதும் மதிக்கும் விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விருதுகள். இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த இந்த ஆண்டுக்கான பிலிம்பேர் விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்ப்படங்களின் பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்
சிறந்த படங்கள் விருதுக்காக அருவி, அறம், தரமணி, தீரம் அதிகாரம் ஒன்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளது.
சிறந்த இயக்குனர் விருதுக்காக அருன்பிரபு புருஷோத்தமன், அட்லி, தனுஷ், கோபி நயினார், எச்.வினோத், புஷ்கர் காயத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகருக்கான விருது கார்த்தி, மாதவன், ராஜ்கிரண், விஜய், விஜய்சேதுபதியும், சிறந்த நடிகைக்கான விருதுக்கு அதிதி பாலன், அமலாபால், ஆண்ட்ரியா, ஜோதிகா, நயன்தாரா, ரேவதி ஆகியோர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகாக அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான் ஆகியோர்களும், சிறந்த பாடலாசிரியர்களுக்கான விருதுகாக மதன் கார்க்கி, வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் யார் யார் விருதுகளை வெல்ல போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments