சென்னையை நோக்கி நகரும் சிகப்பு தக்காளிகள்: செம மழை பெய்யும் என வெதர்மேன் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று முதல் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்
அக்னி நட்சத்திரம் கடந்த போதிலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டியெடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தொடங்குவதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சென்னையை நோக்கி சிவப்பு தக்காளி நகர்ந்து வருவதாகவும் இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்
அவர் கூறியதை போலவே தற்போது சென்னையில் பல பகுதிகளில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் உள்ளது என்பதும் மிக விரைவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் மழை பெய்தால் மட்டுமே சென்னை குளிர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது
Reached western boundary of the Chennai City, even a small spell would be special, being the 1st rains of the Thakkali season for KTCC. pic.twitter.com/hvOuAA7tyO
— TamilNadu Weatherman (@praddy06) June 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments