புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கக் கடலில் கடந்த இரண்டு வாரங்களாக 2 காற்றழுத்த தாழ்வு மையங்கள் தோன்றி, அவை இரண்டுமே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்று கரையை கடந்தது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த மூன்றாவது காற்றழுத்த தாழ்வு காரணமாக எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்றாவது காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் தெற்கு கேரளா ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெயில் அடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சென்னைக்கு இந்த மூன்றாவது காற்றழுத்த தாழ்வு காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
such as Ramanthapuram, Thoothukudi, Pudukottai, Nagai, Pudukottai, Sivaganga, Kanyakumari, Thenkasi, Virudhunagar, Kanyakumari, Tirunelveli, Trivandrum, Kollam and other south kerala regions will all see action today - Refer 2nd photo.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments