'சக்கரம்' நமக்குத்தான்: புதிய புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாளில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் ’சக்கரம் நமக்கு தான்’ என்று புதிய புயல் தமிழ்நாட்டை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்
டிசம்பர் முதல் வாரம் வங்க கடலில் சக்கரம் உருவாக்க போகிறது என்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக அங்கு என்ன நடக்கும் என்று உறுதியாக கூறுவது கடினம் என்றும் டிசம்பர் முதல் வாரம் இந்த சக்கரத்தை வட தமிழகத்தை சேர்ந்தவர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த பதிவில் ’சக்கரம் நமக்கு தான்’ என்று பதிவு செய்துள்ளார். இது புயல் தமிழ்நாட்டை நோக்கி திரும்பி வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழ்நாடு ஆந்திரா நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வங்க கடலில் தோன்றிய புயல் வங்காளதேசம் பக்கம் சென்று விட்டதால் தமிழகம் உள்பட இந்திய மாநிலங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் தற்போது உருவாகியுள்ள புயல் என்ற சக்கரம் தமிழ்நாட்டை நோக்கி வந்தால் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Namakku Thaan #chakkaram
— Tamil Nadu Weatherman (@praddy06) November 28, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments