200 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் மிக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கனமழை சென்னையில் பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘டெல்டா மாவட்டங்களில் இருந்து மெல்ல மெல்ல மேகங்கள் சென்னையை நோக்கி வந்து அடைந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக சென்னை மாநகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது

பெரும்பாலான பகுதிகளில் நாளை காலை 100 மில்லி மீட்டர் மழை அளவை தாண்டி விடும். மேலும் கடலூர், காரைக்குடி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மிக நல்ல மழை பெய்யும். சென்னையில் 1000 மில்லிமீட்டர் மழையை தொடுவதற்கு இன்னும் 70 மில்லி மீட்டர் மழை அளவே தேவைப்படுகிறது. நவம்பர் மாதத்திற்குள் 1,000 மில்லி மீட்டர் மழை எட்டிவிடும். கடந்த 200 ஆண்டுகளில் சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை என்பது நான்கு முறை மட்டுமே வந்துள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்

கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை சென்னையில் மழை பெய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது