சென்னையில் தோன்றிய சிகப்பு தக்காளி: கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் கனமழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கி உள்ள நிலையில் தொடங்கிய அடுத்த நாளே சென்னையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அண்ணா சதுக்கம் சாலையிலும் மெரீனா கடற்கரையிலும் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கின்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சென்னை மழை குறித்த சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார். சென்னையின் மீது எவ்வாறு மேக மூட்டம் இருந்தது என்பது குறித்து ஒரு செயற்கைக்கோள் படத்தையும் அவர் அதில் வெளியிட்டுள்ளார்.
அண்ணாநகர் பகுதியின் மேல் பரப்பில் சிவப்பு வண்ணத்தில் மேகங்கள் காணப்படுகிறது. இதை சிகப்பு தக்காளி என்று அவர் வர்ணிப்பது வழக்கம். இதுபோன்ற சிகப்பு தக்காளி கனமழையை குறிக்கும் என்றும் அதனால் தான் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை நகரின் பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக மயிலாப்பூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது போல் மழை பெய்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னையின் பல பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்து செஞ்சுரி அடித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Semma Semma !!!! The dryline-wetline are creating Thakkalis too. What an spell going on and the intensity is vera level in Anna Nagar pic.twitter.com/ZU1DCUzdBw
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) October 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments