ஃபனி புயலால் சென்னைக்கு ஏற்பட்ட பிரச்சனை: தமிழ்நாடு வெதர்மேன்
- IndiaGlitz, [Wednesday,May 01 2019]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாகவும் ஃபனி புயலாகவும் மாறிய நிலையில் இந்த புயல் தற்போது வங்கதேசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. வரும் 3ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த புயலால் வடகிழக்கு மாநிலங்களில் வறட்சியான தட்பவெப்ப நிலை் இந்த வார இறுதியில் நிகழும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் வட தமிழகத்தில் குறிப்பாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இந்த வாரம் அதிக வெப்பத்துடன் இருக்கும். வடமேற்கு காற்று காரணமாக ராயல்சீமா பகுதியில் கடுமையான வெப்பம் நிலவும்.
மேலும் நீலகிரி மற்றும் உள்புற மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரளவு மழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளாவிலும் ஓரளவுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில் ஃபனி புயலால் அதிக வெப்பம் ஏற்படும் என்பதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிகம் வெப்பம் நிலவும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது