சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ECR மற்றும் OMR பகுதிகளிலும், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக டிசம்பர் 6ஆம் தேதி வரை, மழை பெய்யக்கூடும் என்றும் இந்த மழை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாலோ அல்லது புயலால் வருபவை அல்ல என்றும் இதுகுறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியபடியே இன்று சென்னையில் உள்ள முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகலம் செல்வோர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும் இன்றைய கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments