சென்னையில் வெளுத்து வாங்கப்போகிறது கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இன்று இரவும் நாளையும் கன மழை வெளுத்து வாங்க போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது மழை குறித்த நிலவரங்களை அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை வெளுத்து வாங்க போகிறது என்று தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு வெப்பச்சலனங்கள் உருவாகி இருப்பதாகவும் ஒன்று சென்னை - நெல்லூர் பகுதியிலும் இன்னொன்று மைசூரு - ராமநாதபுரம் பகுதிகளும் உருவாகியுள்ளதாகவும். இந்த இரண்டு வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை - நெல்லூர் இடையே அடுத்த இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், சேலம், கரூர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.