வானிலை மட்டுமல்ல, இதிலும் நான் எக்ஸ்பர்ட் தான்: தமிழ்நாடு வெதர்மேனின் சரியான கணிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
துல்லியமான கணிப்பு: மற்றொரு துறையிலும் காலடி எடுத்து வைத்த தமிழ்நாடு வெதர்மேன்!வானிலை அறிக்கை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ரமணன் அவர்கள் தான். அந்த அளவிற்கு அவர் மழை, புயல், வெள்ளம் குறித்த துல்லியமான தகவல்களை பல வருடங்களாக அளித்துக் கொண்டிருந்தார்
இந்த நிலையில் ரமணனின் ஓய்வுக்கு பின்னர் வானிலை அறிக்கையில் புகழ்பெற்றவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் வானிலை அறிவிப்பில் மிகச் சிறப்பாக செய்துவரும் இவர் கிட்டத்தட்ட அனைத்து தகவல்களையும் ரேடார் மூலம் கண்டறிந்து துல்லியமாக மக்களுக்கு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கன மழை மற்றும் வெள்ளம் நேரங்களில் இவர் தரும் தகவல்கள் ஒவ்வொன்றும் பயனுள்ளவை என்பது தெரிந்ததே
இந்த நிலையில் வானிலையை அடுத்து தற்போது கிரிக்கெட்டிலும் களமிறங்கியுள்ளார் பிரதீப் ஜான். தனது சமூக வலைத்தளத்தில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி குறித்து அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார். கடந்த போட்டியில் இந்தியா படு மோசமாக தோல்வி அடைந்தபோது அடுத்த போட்டியில் இந்தியா பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக பிரதீப் ஷாவுக்கு பதிலாக சுபம் கில்லை களமிறக்க வேண்டும் என்றும் கோஹ்லி விடுமுறையில் செல்ல இருப்பதால் அவருக்கு பதிலாக ராகுல் அல்லது ரோகித் சர்மா களமிறங்க வேண்டும் என்றும், ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கண்டிப்பாக அணிக்கு வேண்டும் என்று அவர் தெரிவித்து இருந்தார்
அவர் கூறியது போலவே கிட்டத்தட்ட இன்றைய இந்திய அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வானிலையை அடுத்து கிரிக்கெட் என்ற இன்னொரு துறையிலும் பிரதீப் ஜான் காலடி வைத்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது மட்டுமின்றி அவர் தனது ஒவ்வொரு டுவீட்டிலும் அசத்தலாக இந்திய ஆஸ்திரேலிய போட்டி குறித்து சுவராசியமாக கூறி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விமர்சன விருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout