நாளை முதல் அரசு விரைவில் பேருந்துகள் இயங்குமா? போக்குவரத்து துறை விளக்கம்!

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இரவு நேரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதை அடுத்து நாளை முதல் அரசு விரைவு பேருந்துகள் பகலில் இயங்கும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் நாளை முதல் பகல் நேரங்களில் இயக்கப்படும் என்றும் இரவு நேரங்களில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைக்கு அனுமதி இல்லை என்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

மேலும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதால் அன்றையதினம் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்றும் ஏற்கனவே அந்த நாட்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் அல்லது கட்டணத்தை திருப்பி பெற்று கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பேருந்துகள் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்குள் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

More News

'இந்தியன் 2' படப்பிடிப்பில் விவேக் கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ

சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் தனது பிறந்தநாளை 'இந்தியன் 2' படப்பிடிப்ப்பின்போது கொண்டாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்த யோகிபாபு: எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது அஜித்தின் 'வலிமை' உள்பட சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருக்கும் நிலையில் நட்புக்காக

முன் ஜாமீன் கோரி மனு செய்த மன்சூர் அலிகான்: என்ன காரணம்?

கொரோனா தடுப்பூசி குறித்தும் கொரோனா வைரஸ் பரவல் கொடுத்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூரலிகான் திடீரென முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பொறியியல் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த சர்ப்ரைஸ்....!

இந்தவருடம் பொறியியல் செமஸ்டர் எழுதப்போகும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

பூட்டியிருந்த வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை… போலீசார் வலைவீச்சு!

ஒசூர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து மர்ம நபர்கள் 200 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.