நாளை முதல் அரசு விரைவில் பேருந்துகள் இயங்குமா? போக்குவரத்து துறை விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இரவு நேரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதை அடுத்து நாளை முதல் அரசு விரைவு பேருந்துகள் பகலில் இயங்கும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் நாளை முதல் பகல் நேரங்களில் இயக்கப்படும் என்றும் இரவு நேரங்களில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைக்கு அனுமதி இல்லை என்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
மேலும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதால் அன்றையதினம் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்றும் ஏற்கனவே அந்த நாட்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் அல்லது கட்டணத்தை திருப்பி பெற்று கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பேருந்துகள் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்குள் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com