கொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம்!!! சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு!!! தமிழக அரசின் அதிரடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்து உள்ளது. இதுவரை தமிழகத்தில் 31 லட்சத்து 55 ஆயிரத்து 619 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் அளித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து அதிக சோதனை மேற்கொள்ளும் மாநிலமாக முன்னிலை வகிக்கிறது.
நேற்றைய நிலைமையை பொறுத்த அளவில் இதுவரை ஒட்டுமொத்த தமிழகத்தில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்து இருக்கிறது. ஆனாலும் குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 2,38,638 ஆக உயர்ந்து இதிலும் தமிழகம் முன்னிலை பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,927 ஆக இருந்து வருகிறது. தற்போது 53,336 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தமிழகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
இந்த எண்ணிக்கையில் சென்னையில் தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா எண்ணிக்கையில் கடும் மாற்றம் அடைந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறது. கடந்த ஜுலை மாதங்களில் 2000க்கும் அதிகமாக இருந்த கொரோனா எண்ணிக்கை அடுத்து 1500 ஆக குறைந்த பின்பு, ஆகஸ்ட்டின் முதல் வாரத்தில் 1000 ஆக குறைந்து, தற்போது 1000க்குக் கீழ் வந்திருக்கிறது. இதனால் சென்னை மிக விரைவில் இயல்பு நிலைமைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை அளிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,023 ஆகவும் அகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையின் பாதிப்பு எண்ணிக்கை 984 ஆகவும் காணப்பட்டது. இதுதான் சென்னையில் முதல் 1000 க்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. அடுத்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாதிப்பு எண்ணிககை 986 ஆகவும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பாதிபபு எண்ணிக்கை 989 ஆகவும் பதிவாகி இருக்கிறது. சென்னையில் தொடர்ந்து 3 நாட்களாக குறைவான எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்று பதிவாகி வருவதால் சென்னை மக்களிடையே புது புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments