ஜிஎஸ்டி வரி எதிரொலி: தியேட்டர் உரிமையாளர்களின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Friday,June 30 2017]

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் பெரும்பாலான வணிகங்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரைத்துறையினர்களுக்கு கடும் பாதிப்பு இருப்பதால் திரைத்துறையினர், திரையரங்க உரிமையாளர்கள் இந்த புதிய வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜிஎஸ்டி வரி மட்டும் கட்டினால் போதுமா? அல்லது தமிழக அரசின் 30% வரியையும் சேர்த்து கட்ட வேண்டுமா? என்பது குறித்த தெளிவு இல்லாததால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வரி 30%, ஜிஎஸ்டி வரி 28% மற்றும் இதர வரிகள் 6% என கட்ட வேண்டிய நிலை வந்தால் திரையரங்க கட்டணத்தில் ரூ.100ல் ரூ.64 அரசுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மீதி 36 ரூபாயை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

எனவே இதுகுறித்து ஆலோசனை செய்த திரையரங்க உரிமையாளர்கள் பொது சேவை வரியை எதிர்த்து, தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து திரைக்காட்சிகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.