12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 1400 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சுமார் 500 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒன்று முதல் எட்டு வரை வகுப்புகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கும் சமீபத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு பொதுத்தேர்வும் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் இன்றி ஆல்பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று முதல் கல்லூரிகளும் மூடப்பட்டன என்பதும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி 12ஆம் வகுப்புக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
பரவி வரும் கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout