திருமண விருந்துக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுச்சேரியில் இருந்து திருமண பார்ட்டி ஒன்றுக்காக மதுபாட்டில் கடத்தி வந்த சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படை புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது கம்பன் நகர் அருகே ஒரு வாகனத்தில் 170 மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தையும் அதில் இருந்த மதுபாட்டில்களையும் கைப்பற்றி போலீசார் பின்னர் விசாரணையில் ஈடுபட்டபோது இந்த மது பாட்டில்களை கடத்தியது கோட்டக்குப்பம் என்ற பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் என்பதும் அவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியின் விருந்துக்காக மதுபாட்டில்களை கடத்தியதும் தெரியவந்தது. தமிழக டாஸ்மாக் கடைகளை விட புதுச்சேரியில் மதுபாட்டில்களின் விலை குறைவு என்பதால் அங்கிருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது.
மதுபாட்டில்களை கடத்தியது தன்னுடைய துறையை சேர்ந்தவர் என்று தெரிந்தும் சட்டப்படி நடவடிக்கை எடுத்த சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்து துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments