10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 17 2017]

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரவுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கொட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://www.tnresults.nic.in ,http://www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி தேர்வு முடிவுகள் மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்களின் மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்
மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 25 ஆம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும் மறுகூட்டலுக்கு மே 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலத்துக்கு தலா ரூ.305, கட்டணமாகவும், மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணமாகவும் வசூல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.