நீர் மேலாண்மையில் முதலிடம் பெற்ற தமிழகம்… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!!!

  • IndiaGlitz, [Saturday,November 07 2020]

 

தமிழகம் நீர் மேலாண்மையின் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாட்டில் நீர் மேலாண்மையைச் சிறப்பாக கையாண்டு மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விருது பட்டியலை அறிவித்து இருக்கிறது.

அந்தப் பட்டியலில் தமிழகம் நீர் மேலாண்மையில் முதலிடம் பெற்ற மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “தென் இந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ததில் சிறந்த மாவட்டமாக வேலூர், கரூர் மாவட்டங்கள் தேர்வாகி உள்ளன. அதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நீர் நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்களில் மராட்டிய மற்றும் ராஜஸ்தான் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.

மேலும் நீர் மேலாண்மையை கற்பித்து மாணவ, மாணவிகளை ஊக்குவித்த பள்ளிகளுக்கான விருதுப் பட்டியலில் புதுச்சேரியின் காட்டேரிக்குப்பத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது. நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட தென்னிந்திய சமூக செயற்பாட்டாளர்களாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவை குளங்கள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முதல் பரிசையும் அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சக்திநாதன் கணபதி பாண்டியன் இரண்டாம் பரிசையும் வென்றுள்ளார்.

More News

பிக்பாஸ் கேட்ட கேள்வியும் சமயோசிதமாக கமல் அளித்த பதிலும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசன் தோன்றும் நாட்கள் என்பதால் மற்ற நாட்களை விட கூடுதல் சுவராஸ்யமாக இருக்கும்

நிஜமாவே பெண்கள் முறத்தால் புலியை விரட்டி இருப்பாங்களோ??? பழமொழியை நிரூபிக்கும் புது கண்டுபிடிப்பு!!!

வீரம் என்ற வார்த்தைக்கு பெரும்பாலும் ஆண்களையே கைக் காட்டுகிறோம். 21 ஆம் நூற்றாண்டில் இந்த கணிப்பு தவறு எனப்பல நேரங்களில் சொல்லப்பட்டாலும்

சுரேஷ் வெளியேற்றம், எஸ்பிபி வீடியோ: இன்றைய செண்டிமெண்ட் எபிசோட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் கமல்ஹாசனுக்கு போட்டியாளர்களின் பஞ்சாயத்தை தீர்க்கவே நேரம் சரியாக இருக்கும்.

'மங்காத்தா' பட நடிகையின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்!

அஜித் நடித்த 'மங்காத்தா' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை லட்சுமிராயின் தந்தை ராம்ராய் என்பவர் காலமானார். இதனையடுத்து தனது தந்தையார்

காஜல் அகர்வாலின் ஹனுமூன் எங்கே? வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கணவருக்காக 'கர்வா செளத்' என்ற விரதத்தையும் மேற்கொண்டார்