தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? முக்கிய அறிக்கை இன்று தாக்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கான நேரடி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதால் பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டது.
இருப்பினும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதன்பின் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் பெற்றோர்களிடம் கருத்து கேட்ட நிலையில் 80% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க சம்மதித்துள்ள நிலையில் பெற்றோர்களின் கருத்துக்களை கொண்டு அறிக்கையாக தயார் செய்யப்பட்டு இன்று முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவை பள்ளி கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய அறிவிப்பை விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments