தமிழக பள்ளி மாணவர்கள் இனி தொலைக்காட்சியில் பாடம் படிக்கலாம்!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசு, கல்வி தொலைக்காட்சியை நிறுவி அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. தேர்வு தயாரிப்புகள், வகுப்பு பாடங்கள் என பள்ளிகளில் நடைபெறுவது போன்றே பல நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்டு அனைத்து மாணவர்களும் வீடுகளில் அடைந்து கிடக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகள் தற்போது ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி இருக்கின்றன. அதுபோல அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுமா எனக் கேள்வி வைக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில் கல்வி தொலைக்காட்சி உள்பட தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பள்ளி பாடங்களின் ஒளிபரப்பை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு ஏற்கனவே நீட், ஜேஇஇ போன்ற முதன்மைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இத்தொலைக் காட்சியில் நடைபெற்று வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தால் அனைத்து பள்ளி வகுப்பு பாடங்களும் தொலைக்காட்சி வாயிலாக ஒளிப்பரப்பத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளைத் தவிர்த்து அனைத்து நாட்களிலும் அனைத்து வகுப்பு பாடங்களும் ஒளிபரப்பப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2 -11 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த வகுப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்பும் 30 நிமிடங்கள் அமையும் எனவும் கூறப்படுகிறது. தற்போது கல்வி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் எந்த நேரத்தில் எந்த வகுப்புகளுக்கு இந்நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும் என்ற தகவலை Kalvitholaikaatchi.com என்ற இணையத் தளத்தில் சென்று பார்க்குமாறு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வகுப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் என பல தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout