எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளது. புளூவேலில் ஏன் சிக்க வேண்டும்? காவல்துறை ஆணையர் அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று புளுவேல் என்ற எமனிடம் சிக்கி அதிலிருந்து வெளியே வரவிடாமல் தவிக்கின்றனர். இதன் உச்சகட்டமாக பலர் உயிரையே மாய்த்து கொள்வதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
இந்தியாவில் மும்பை, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் இந்த விளையாட்டால் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று தமிழகத்தின் மதுரை பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுபோன்ற தற்கொலை மேலும் நடக்காமல் தவிர்க்க தற்போது உடனடி நடவடிக்கை தேவை. அதே நேரத்தில் இந்த விஷயத்தில் அரசை மட்டுமே குறை கூறாமல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களுடன் முடிந்தவரை அதிகநேரம் செலவிட வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டில் 50 வகை டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது கடைசியில் தற்கொலை செய்துகொள்ள தூண்டப்படுகிறது. விளையாடுபபவர்கள் அவர்களது நண்பர்களையும் இதில் இணைப்பதால் இந்த விளையாட்டு மிக வேகமாக பரவுகிறது. ஆன்லைனில் விளையாட எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளபோது புளூவேல் விளையாட்டை தேடிப்போய் அதில் ஏன் சிக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
மேலும் பெற்றோர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளில், 'பெற்றோர்கள் பிள்ளைகளை சரியாக கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளின் நடத்தையை கூர்ந்து கவனித்து அவர்கள் நடத்தையில் மாற்றம் வருகிறதா? முரட்டுத்தனமாக நடந்துக்கொள்கிறார்களா? அதிக நேரம் இணையதளத்தில் இருக்கிறார்களா? தனிமையை விரும்புகிறார்களா? போன்றவற்றை கண்காணித்து அவர்களுக்கு புரியும்படி அறிவுரை கூற வேண்டும். அதிக நேரம் பிள்ளைகளுடன் செலவழித்து அவர்கள் மனதை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சனை தானாக தீர்ந்துவிடும். மேலும் பிள்ளைகள் வெறும் ஆன்லைன் விளையாட்டில் மட்டும் மூழ்கிவிடாமல் வெளிப்புற விளையாட்டுகளில் ஆர்வத்தை தூண்டும் விதமாக அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் சென்னை காவல்துறை சார்பில் வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த நேரத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கலாம், அல்லது ஆணையருக்கான தனி வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தொடர்பு கொள்பவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments