தமிழகத்தில் டோட்டலா டெபாசிட் இழந்த கட்சிகள்… மூன்றாவது கட்சி சாத்தியமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் திமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் தமிழகச் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்த வரைக்கும் திமுக, அதிமுக எனும் இருபெரும் கட்சிகளுக்குள் மட்டுமே போட்டி நிகழ்ந்ததே தவிர மூன்றாவது ஒரு பெரிய கட்சி இக்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலைமை ஏற்படவில்லை.
அதோடு 5 முனைபோட்டி நிலவியதாகக் கூறப்பட்ட இத்தேர்தலில் திமுக, அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்ட தொகுதிகளில் பெரும்பாலும் டெபாசிட்டை இழந்துபோன அவலம் நிகழ்ந்து இருகிறது. அதாவது நாம் தமிழர் போட்டியிட்ட 234 தொகுதிகளில் ஒரு தொகுதியைத் தவிர மற்ற 233 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. அதேபோல மக்கள் நீதிமய்யம் போட்டியிட்ட 180 தொகுதிகளில் 178 இடங்களில் டெபாசிட்டை இழந்து இருக்கிறது.
அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக 60 தொகுதிகளில் களம் இறங்கி அனைத்துத் தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. அதோடு மாற்று அணியாக உருவாகும் என எதிர்ப்பார்த்த அமமுக தான் போட்டியிட்ட 165 தொகுதிகளுக்கு 158 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது. சரத்குமாரின் வாக்கு எண்ணிக்கை இதைவிட மோசமான நிலையில் இருப்பதாகப் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 3 ஆவது பெரிய கட்சி என்பது சாத்தியமா? என்பதையும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதோடு தமிழகச் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் வரிசைப் பட்டியலும் வெளியாகி இருக்கிறது. இதில் 3 ஆவது 4 ஆவது ஏன் 6 ஆவது இடத்திற்கும் சில கட்சிகள் வாக்கு அடிப்படையில் தள்ளப்பட்டு உள்ளன.
அதில் திமுக கூட்டணி 45.4% வாக்குகளுடன் 159 இடங்களில் மட்டுமே முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மற்றுமுள்ள 73 இடங்களில் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடித்து இருக்கிறது. அதோடு திமுக தனித்துப் போட்டியிட்ட 188 தொகுதிகளில் 39.7% வாக்குகளைப் பெற்று 133 இடங்களில் முதல் இடத்தையும் 55 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்து இருக்கிறது.
அதேபோல அதிமுக கூட்டணி 39.7% வாக்குகளுடன் தான் வெற்றிப்பெற்ற 75 தொகுதிகளில் முதல் இடத்தையும் 159 இடங்களில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் தான் போட்டியிட்ட 25 தொகுதிகளுக்கு 18 தொகுதிகளில் முதல் இடத்தையும் 6 இடத்தில் இரண்டாவது இடத்தையும் கோவை தெற்கு தொகுதியில் 3 ஆவது இடத்தையும் வாக்கு அடிப்படையில் பிடித்துள்ளது.
தமிழகத்தில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி 6.6% வாக்குகளுடன் 177 இடங்களில் மூன்றாம் இடத்தையும் 57 இடத்தில் 4 இடத்தையும் பிடித்து இருக்கிறது. சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியைத் தவிர மற்ற 233 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அமமுக தான் போட்டியிட்ட 165 தொகுதிகளில் 158 இடங்களில் டெபாசிட்டை இழந்து இருக்கிறது. இதில் டிடிவி தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் இரண்டாம் இடத்திலும் 25 தொகுதிகளில் 3 ஆம் இடத்தையும் 74 தொகுதிகளில் 4 ஆவது இடத்தையும் 53 தொகுதிகளில் 5 ஆவது இடத்தையும் பிடித்து வாக்கு அடிப்படையில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அமமுக கூட்டணியோடு போட்டியிட்ட தேமுதிக 2.8% வாக்குகளுடன் போட்டியிட்ட 60 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளது. அதிலும் 2 தொகுதிகளில் 3 ஆவது இடத்தையும் 26 தொகுதிகளில் 4 ஆவது இடத்தையும் 23 தொகுதிகளில் 5 ஆவது இடத்தையும் பிடித்து இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2.45% வாக்குகளுடன் போட்டியிட்ட 180 தொகுதிகளில் 178 தொகுதிகளுக்கு டெபாசிட்டை இழந்து இருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் 2 ஆவது இடத்தையும் 25 தொகுதிகளில் 3 ஆவது இடத்தையும் 74 தொகுதிகளில் 4 ஆவது இடத்தையும் 53 தொகுதிகளில் 5 ஆவது இடத்தையும் 14 தொகுதிகளில் 6 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் புள்ளிவிரவரங்களைக் கொண்டு பார்க்கும்போது தமிழகத்தில் 3 ஆவது பெரிய கட்சி என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout