இந்தியக் காலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்திற்குச் சிறப்பிடம் வேண்டும்… கோரிக்கை வைத்த தமிழக முதல்வர்!!!
- IndiaGlitz, [Wednesday,September 23 2020]
சமீபத்தில் இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக 14 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழுவில் கடுமையான இனப்பாகுபாடு பேணப்பட்டு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை இந்தியாவின் மூத்த தலைவர்கள் முதற்கொண்டு சாதாரண மக்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கும் கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழகத்திற்கு தனித்த இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்திருக்கிறார்.
தமிழரின் நாகரிகம் இந்திய அளவில் தனிச் சிறப்புடையது. கி.மு காலத்திலேயே உயர்ந்து நின்ற தமிழ் காலாச்சாரத்தை ஒதுக்கிவிட்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பலரும் குற்றச்சாட்டை தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்து இருப்பதோடு மேலும் தமிழ் காலாச்சாரத்திற்கு தனித்த இடத்தை ஒதுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
மேலும் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் தமிழகம் கலாச்சாரத்தில் முன்னோடியாக மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ள காலாச்சார ஆய்வுக் குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை. அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவரும் இடம்பெறவில்லை. இந்தச் செயலைக் கண்டித்து தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மகாபலிபுரம், தஞ்சை பெரிய கோவில், உத்திரமேரூர் கல்வெட்டுகள், கீழடி என தமிழகத்தின் நாகரிக வரலாறு பல ஆயிரக்கணக்கான வருடங்களைக் கடந்து செல்வாக்கு பெற்று வருகிறது. சீன பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மகாபலிபுரத்திற்கு கடந்த ஆண்டு வருகை தந்திருந்தார். அத்தனை சிறப்பு வாய்ந்த நாகரிக வரலாறுகளை இந்தியக் கலாச்சார ஆய்வுக்குழுவிற்கு எடுத்துச் சொல்ல தமிழகத்தின் சார்பாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
மேலும் தமிழரின் நாகரிக வரலாற்றை உலக அளவில் கொண்டு செல்லும் கலாச்சார ஆய்வுக்குழு தமிழகத்தின் வரலாறுகளையும் மக்களின் பண்பாட்டு வழக்கங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக முதல்வர் முன்வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.