ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு
- IndiaGlitz, [Saturday,May 02 2020]
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. சுமார் 3 மணி நேரம் இந்த கூட்டத்தில் நடந்த ஆலோசனையை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கு மே 17 வரை நீட்டிப்பு செய்த மத்திய அரசின் முடிவை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதேபோல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது என்றும், ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்படும் என்றும், சிறு குறு தொழில்கள் தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்னை உள்பட சிகப்பு மண்டல பகுதியாக இருக்கும் 12 மாவட்டங்களுக்கு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் சென்னையில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பதால் சென்னையில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வலியுறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.