கவலைப்படாதீங்க, மனசை தேற்றி கொள்ளுங்கள்: மீனாவுக்கு ஆறுதல் கூறிய தமிழக அமைச்சர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவருக்கு நேரில் தமிழக அமைச்சர் ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் மற்றும் இருதய குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டதை அடுத்து அவர் சமீபத்தில் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.
இந்த நிலையில் மீனாவுக்கும் அவரது மகளுக்கும் திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று மீனாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
கவலைப்படாதீர்கள் என்றும், மனதை தேற்றிக் கொள்ளுங்கள் என்றும் மீனாவுக்கும் அவருடைய மகளுக்கும் அமைச்சர் பொன்முடி ஆறுதல் கூறினார். அப்போது மீனாவுக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் கலா அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments