கொரோனாவுக்கு பலியான தமிழக அமைச்சர்: இன்று சொந்த ஊரில் இறுதிச்சடங்கு!
- IndiaGlitz, [Sunday,November 01 2020]
தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனியார் மருத்துவமனை வாசலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணு புகைபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரை தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் அமைச்சர் துரைக்கண்ணு புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
கொரோனா வைரஸ் காரணமாக அமைச்சர் துரைக்கண்ணு காலமாகி உள்ளதால் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படாது என தெரிகிற.து இதனை அடுத்து சற்று முன்னர் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு சென்றது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியில் மறைந்த அமைச்சரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளதாகவும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருந்து சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் பலியாகி உள்ள நிலையில் தற்போது அமைச்சர் ஒருவரும் கொரோனா வைரஸ்க்கு பலியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.