தமிழகத்தை நோக்கி மீண்டும் புயலா? தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?
- IndiaGlitz, [Tuesday,December 05 2017]
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதாவது இன்றும் நாலையும் கனமழை பெய்யும் என்றும், அந்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றால் அது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்த தகவலின்படி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் இதனால், தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும் மீனவர்கள் கடலுக்குள் செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், அப்படியே மீன்பிடிக்க கடலுக்கு சென்றாலும் வடக்கு தமிழக கடற்கரை, ஆந்திரா கடற்பகுதிகுள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்த வானிலை மையத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்