ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசு! யாருக்கெல்லாம் பொருந்தும்?
- IndiaGlitz, [Thursday,February 25 2021]
மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. இதனால் 58 வயதில் ஓய்வுபெறும் அனைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களும் இனி 60 வயது வரையிலும் பணியாற்ற முடியும்.
சட்டப்பேரவையில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 110 விதியின் கீழ் புது அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
முன்னதாக அரசு உழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இந்த நிலமையை கொரோனா காலத்தில் 59 ஆக மாற்றி தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். தற்போது மேலும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.