காலரா நோயை வென்ற தமிழகம்… சீரிய நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு குவியும் பாராட்டு!!!

 

காலரா நோய் பாதிப்பால் தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற தகவலை தமிழகச் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. இதனால் காலாரா நோய்க்கு எதிரான பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு கழிவுநீர் மேலாண்மையை மிக நேர்த்தியான முறையில் கையாளுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளினால் காலரா போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு சிறப்பான கழிவுநீர் பராமரிப்பு, பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் போன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் காலாரா உயிரிழப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதில் 2012-2019 வரை என கடந்த 9 ஆண்டுகளாக வெறுமனே 710 பேர் மட்டுமே காலாரா நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 89 பேருக்கு காலாரா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து இருந்ததையும் தமிழகச் சுகாதாரத்துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. திமுக ஆட்சி காலமான கடந்த 2007-2011 ஆம் ஆண்டு வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3544 ஆக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 709 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஆனால் தற்போதைய ஆளும் அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் காலரா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அதுவும் கடந்த 2017 இல் இருந்து தமிழகத்தில் ஒருவர் கூட இந்நோய் பாதிப்பால் தாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகம் கொடிய நோய் பாதிப்பில் இருந்து வெற்றிப்பெற்றுள்ளது.