கொரோனா தடுப்பு பணிகளில் நீங்களும் பங்கேற்க வேண்டுமா? இதோ வழி…

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் விருப்பம் உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து மாநில மீட்புக் குழுவுடன் இணைந்து பணியாற்றலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இதற்காக ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையத் தளத்திற்குச் சென்று தங்களது விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அல்லது 8754491300 என்ற எண் மூலமாகவும் tnngocoordination@gmail.com என்ற இணைய முகவரி மூலமாக மாநில மீட்புக்குழுவை தொடர்பு கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவுறித்தி இருக்கிறது.

கொரோனா பரவல் நேரத்தில் உணவின்றி வாடும் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இன்னும் சிலர் நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர். இப்படி இல்லாமல் தங்களது பங்களிப்பை செலுத்த விரும்புவோர் அரசாங்கத்துடன் கைக்கோர்த்து தமிழக மக்களின் உயிர்க்காக்கும் பணியில் ஈடுபடலாம். இதற்காக மேற்கண்ட இணைய முகவரியைத் தொடர்பு கொள்ளுங்கள்.