'விடுதலை 2' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..!
- IndiaGlitz, [Thursday,December 19 2024]
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை 2’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
’விடுதலை 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான RS Infotainment பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து, டிசம்பர் 20 ஆம் தேதி அன்று வெளியாகும் 'விடுதலை 2’ என்ற தமிழ் திரைப்படத்தை ஒரு நாள் மட்டும் கூடுதலாக சிறப்பு காட்சியினை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை, அதாவது ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட, தமிழ்நாடு திரையரங்குகள் சட்டம் அதிகாரத்தின் படி அனுமதி அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, நாளை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணிக்கு முதல் காட்சியாக திரையிடப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, அனுராக் காஷ்யப், கிஷோர், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.. வேல்ராஜ் ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.