நயன்தாராவின் உண்மையான திருமணம் தேதி, மருத்துவமனை மூடப்படுகிறதா? தமிழக அரசின் அறிக்கை

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராகு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை செய்ய தமிழக அரசின் சுகாதாரத்துறை குழு அமைத்தது. இந்த குழுவினர் விசாரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நயன்தாராவின் உண்மையான திருமண தேதி மற்றும் நயன்தாராவின் வாடகை தாய் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையை மூடுதல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முழு விபரங்கள் இதோ:

சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகை தாய் மூலமாக இரட்டைக்குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில்‌ குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்‌. இச்செய்தியை தொடர்ந்து இயக்குநர்‌, மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்பணிகள்‌ அவர்களால்‌ 13.10.2022 உயர்மட்டவிசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிய வந்தது. அம்மருத்துவமனை மற்றும்‌ சிகிச்சை அளித்த மருத்துவர்‌ மற்றும்‌ வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும்‌ நேரடி விசாரணை இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும்‌ அச்சிகிச்சை தொடர்பான விசாரணையில்‌ கீழ்காணும்‌ ஆய்வு குறிப்புகள்‌ அறிவிக்கப்படுகிறது.

* இவ்விசாரணையில்‌ இத்தம்பதியர்கள்‌ மற்றும் வாடகைத்தாய்‌ ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம்‌ மற்றும்‌. வாடகைத்தாய்‌ முறைக்கான வழிகாட்டு 'நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிய வந்தது.

* ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்‌ பிரிவு 3:10:5-ன்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும்‌ அவருக்கு, திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன்‌ உள்ளதும் விசாரணையில்‌ தெரிய வந்தது.

. இத்தம்பதியருக்கு பதிவு திருமணம்‌ 11.03.2016இல்‌ நடைபெற்றதாக பதிவு சான்றிதழ்‌ மருத்துவமனை சார்பில்‌ சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின்‌ உண்மைத்தன்மை பதிவு துறையால்‌ உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்‌ பிரிவு 3:16.2-ன்படி மேற்காணும் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழ்ந்தை பெற்றுக்கொள்வது குறித்த. மருத்துவச்சான்று 'விசாரணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

* தனியார்‌ மருத்துவமணையில்‌ தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல்‌ அவர்களது குடும்ப மருத்துவரால்‌ வழங்கப்பட்ட பரிந்துரை கடித்த்தின்‌ அடிப்படையில்‌ சிகிசசை அளித்ததாக குறிப்பிட்டார்‌. அக்குடும்ப மருத்துவரின் முகவரியில்‌ விசாரணை செய்தபோது இடமாற்றம்‌ செய்யப்பட்டுள்ளதாகவும்‌ அவரை தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள்‌ உபயோகத்தில்‌ இல்லை. மேலும்‌ விசாரணையில்‌ அம்மருத்துவர்‌ வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிய வருவதால்‌ அக்குடும்ப மருத்துவரிடம்‌ குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.

* சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின்‌ சிகிச்சை பதிவேடுகள்‌ மருத்துவமனையால்‌ முறையாக பராமரிக்கப்படவில்லை.

* ஆகஸ்ட்‌ 2020 மாதத்தில்‌ சினைமுட்டை மற்றும்‌ விந்தணு பெறப்பட்டு கருமுட்டைகள்‌ உருவாக்கப்பட்டு உறைநிலையில்‌ மருத்துவமனையில்‌ சேமித்து வைக்கப்பட்டு நவம்பர்‌ 2021 மாதத்தில்‌ வாடகைத்தாய்‌ ஒப்பந்தம்‌ போடப்பட்டது. மார்ச்‌ 2022-ல்‌ கருமுட்டைகள்‌ வாடகைத்தாயின்‌ கருப்பையில்‌ செலுத்தப்பட்டு இக்குழந்தைகள்‌ அக்டோபர்‌ மாதம்‌ பிரசவிக்கபட்டுள்ளாதாக தெரிய வருகிறது.

* செயற்கை கருத்தரித்தல்‌ தொழில்நுட்ப சட்டத்தின்கீழ்‌ வாடகை தாய்‌ உறவினராக இருத்தல்‌ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால்‌ இச்சட்டத்திற்கு முந்தைய ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்படி உறவினர்‌ அல்லாதோர் வாடகைத்தாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார்‌. கருக்கள்‌ வளர்ந்த நிலையில்‌ இரட்டை குழந்தைகள்‌ அறுவை சிகிச்சை மூலம்‌ பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள்‌ 09:10.2022 அன்று தம்பதியர்களிடம்‌ வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில்‌ தணியார்‌ மருத்துவமனையில்‌ கீழ்கண்ட குறைபாடுகள்‌ இக்குழுவால்‌ கண்டறியப்பட்டது.

* ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமணையில்‌ தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள்‌ மற்றும்‌ வாடகைத்தாயின்‌ உடல்‌ நிலை குறித்த ஆவணங்கள்‌
முறையாக வைத்திருக்க வேண்டும்‌. ஆனால்‌ இதுகுறித்த ஆவணங்கள்‌ சரியான வகையில்‌ மருத்துவமணையில்‌ பராமரிக்கப்படவில்லை.

எனவே. மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள்‌ முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல்மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

சர்ச்சைக்கு பதிலளிக்கும் இந்த சீசனின் முதல் குறும்படம்.. தவறு யார் மேல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த பொம்மை டாஸ்க் பல போட்டியாளர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் முத்தமிடும் ஜோடி: வீடியோ வைரல்!

பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷிடம் நான் என்னையே பார்க்கின்றேன்: பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் பேட்டி!

தனுஷிடம் நான் என்னையே பார்க்கிறேன் என பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

என்கிட்ட எல்லாரும் மன்னிப்பு கேட்கணும்: தனலட்சுமி ஆவேசம்

என் மீது குற்றம் கூறிய எல்லாரும் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி ஆவேசமாக கூறிய புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் அடுத்த படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அடுத்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.