இதுக்கு பேரு சிறப்பு காட்சியா? தமிழக அரசின் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணி, 7 மணி காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது
தமிழகத்திலும் அதிகாலை காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் விடுத்த வேண்டுகோளை அடுத்து தமிழகத்தில் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் அரசாணை சமீபத்தில் வெளியானது.
ஆனால் தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பின்படி ’லியோ’ திரைப்படம் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முதல் காட்சியாக காலை 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19, 20, 21, 22, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் தினமும் 5 காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் திரையிட்டு கொள்ளலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு ஆரம்பமாக வேண்டும் என்றும் இரவு 1:30 மணிக்குள் கடைசி காட்சி முடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால் அதிகாலை 4 மணி, 7 மணிக்கு காட்சிகள் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டில் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி ஆரம்பமாக இருப்பதால் தமிழகத்தில் 18 ஆம் தேதியே பிரிமியர் காட்சி திரையிடப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments