'லியோ' சிறப்பு காட்சி குறித்து தமிழக அரசின் உத்தரவு.. அதிகாலை காட்சி உண்டா?

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் ‘லியோ’ திரைப்படத்திற்கு தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ரஜினியின் ’ஜெயிலர்’ உட்பட சில படங்களுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் ‘லியோ’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு ‘லியோ’ படம் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் 19ஆம் தேதி மட்டும் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அதிகாலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசே ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதாவது 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் மட்டும் திரையிட்டு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாலை 4 அல்லது 7 மணி ஆகிய இரண்டு காட்சிகளில் ஒன்றும், அதன் பிறகு 4 காட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.