தனுஷின் 'ராயன்' படத்திற்கு சிறப்பு காட்சி.. தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ராயன்’ திரைப்படம் வெளியாகும் ஜூலை 26 ஆம் தேதி மட்டும் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜூலை 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணிக்குள் 5 காட்சிகள் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே முதல் நாள் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு அரசு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்பதால் ‘ராயன்’ திரைப்படத்திற்கும் அதிகாலை காட்சி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிடப்படுவதால் 8 மணிக்கு முதல் விமர்சனம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout