ரஜினி, விஜய்க்கு கூட கிடைக்காத சலுகை? தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த 'அயலான்' தயாரிப்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ விஜய் நடித்த ’லியோ’ படங்களுக்கு கூட கிடைக்காத சலுகை தற்போது சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ உட்பட பொங்கல் திரைப்படங்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து ‘அயலான்’ தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெளியாகும் மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு கூட அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ’ஜெயிலர்’ ’லியோ’ உட்பட அனைத்து படங்களும் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது.
’லியோ’ தயாரிப்பாளர் இது குறித்து நீதிமன்றம் சென்ற போதிலும் கூட மொத்தம் 5 காட்சிகள் மட்டும் திரையிட அனுமதி கிடைத்தது என்பதும் முதல் காட்சி 9 மணிக்கு திரையிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘அயலான்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து ‘அயலான்’ உட்பட பொங்கல் திரைப்படங்கள் அதிகாலை காட்சி திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அரசின் முறையான அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.
Thanks to Tamil Nadu Government for allowing us to have early morning shows for our film! 🫡
— KJR Studios (@kjr_studios) January 9, 2024
Get ready for #Ayalaan sunrise shows 🌅
Indha Pongal - #AyalaanPongal 👽 Indha Pongal - Namma Pongal 🔥🤩
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments