ரஜினி, விஜய்க்கு கூட கிடைக்காத சலுகை? தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த 'அயலான்' தயாரிப்பாளர்..!

  • IndiaGlitz, [Wednesday,January 10 2024]

ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ விஜய் நடித்த ’லியோ’ படங்களுக்கு கூட கிடைக்காத சலுகை தற்போது சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ உட்பட பொங்கல் திரைப்படங்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து ‘அயலான்’ தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெளியாகும் மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு கூட அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ’ஜெயிலர்’ ’லியோ’ உட்பட அனைத்து படங்களும் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது.

’லியோ’ தயாரிப்பாளர் இது குறித்து நீதிமன்றம் சென்ற போதிலும் கூட மொத்தம் 5 காட்சிகள் மட்டும் திரையிட அனுமதி கிடைத்தது என்பதும் முதல் காட்சி 9 மணிக்கு திரையிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அயலான்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ‘அயலான்’ உட்பட பொங்கல் திரைப்படங்கள் அதிகாலை காட்சி திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அரசின் முறையான அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

More News

கடைசி நேரத்தில் ஒரு மிட்வீக் எவிக்சன்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் கடைசி வாரம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் ஏற்கனவே எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள்

ஜேசன் சஞ்சய் - லைகா படத்தின் படப்பிடிப்பு எப்போது? சூப்பர் அப்டேட்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த ஒப்பந்தம்

பிக்பாஸ் பூர்ணிமாவின் நேரடி திரைப்படம் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் பொங்கல் ஸ்பெஷல் என்பதால் 'அயலான்', 'கேப்டன் மில்லர்' 'மிஷன் சாப்டர் ஒன்' மற்றும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்'

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க வேண்டுமா? இதோ ஒர் அற்புத வாய்ப்பு.. வைரல் விளம்பரம்..!

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான புது முகங்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக விளம்பரம் ஒன்று வெளியாகியிருப்பதை அடுத்து சூர்யாவுடன் நடிக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு

பிக்பாஸ் அபிஷேக் இயக்கத்தில் பிரபல நடிகர்.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா இயக்கத்தில் பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.