தமிழக அரசின் திரைப்பட விருதுகள்.. ஜோதிகா படத்திற்கு 7 விருதுகள்..!

  • IndiaGlitz, [Tuesday,March 05 2024]

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்திற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன.

’36 வயதினிலே’ படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கு கிடைத்துள்ளது. அது மட்டும் இன்றி பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம், சிறந்த நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி, சிறந்த பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர், சிறந்த ஒப்பனை கலைஞர் சபரி கிரிசன், சிறந்த ஆண் பின்னணி குரல் கௌதம் குமார், சிறந்த பாடலாசிரியர் விவேக் ஆகிய விருதுகள் என மொத்தம் 7 விருதுகளை அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

2015 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு கிடைத்த விருதுகள் முழு விவரங்கள் இதோ:

சிறந்த படம் முதல் பரிசு: தனி ஒருவன்
சிறந்த படம் இரண்டாம் பரிசு: பசங்க 2
சிறந்த படம் மூன்றாம் பரிசு: பிரபா
சிறந்த படம் சிறப்புப் பரிசு: இறுதிச்சுற்று
பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்புப் பரிசு): 36 வயதினிலே


சிறந்த நடிகர்: ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)
சிறந்த நடிகை: ஜோதிகா (36 வயதினிலே)
சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)


சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/ 36 வயதினிலே)
சிறந்த குணச்சித்திர நடிகர்: தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
சிறந்த குணச்சித்திர நடிகை: கவுதமி (பாபநாசம்)
சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
சிறந்த கதாசிரியர்: மோகன் ராஜா (தனி ஒருவன்)


சிறந்த உரையாடலாசிரியர்: இரா.சரவணன் (கத்துக்குட்டி)
சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)


சிறந்த பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே),
சிறந்த பின்னணிப் பாடகர்: கானா பாலா (வை ராஜா வை)
சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)
சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்)
சிறந்த ஒலிப்பதிவாளர்: 1) ஏ.எல்.துக்காராம் 2) ஜெ.மஹேச்வரன் (தாக்க தாக்க)
சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்): கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)
சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்): பிரபாகரன் (பசங்க 2)


சிறந்த சண்டை பயிற்சியாளர்: ரமேஷ் (உத்தம வில்லன்)
சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்)
சிறந்த ஒப்பனைக் கலைஞர்: சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று)
சிறந்த தையல் கலைஞர்: வாசுகி பாஸ்கர் (மாயா)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: 1). மாஸ்டர் நிஷேஸ் 2). பேபி வைஷ்ணவி (பசங்க 2)
சிறந்த பின்னணி குரல்: (ஆண்) கௌதம் குமார் (36 வயதினிலே)
சிறந்த பின்னணி குரல்: (பெண்) ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

 

More News

வீட்டில் செல்வசெழிப்பு பெருக உப்பு பயன்படுத்துவது எப்படி?

உங்கள் வீட்டில் செல்வசெழிப்பை அதிகரிக்க உப்பு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய சில எளிய வழிமுறைகள் இங்கே:

வருங்கால ஃபுட்பால் பிளேயர் குட்டித்தல ஆத்விக்.. வித்தியாசமான பிறந்தநாள் கொண்டாட்டம்.!

அஜித் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமின்றி பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஆகியவற்றில் கலந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர் என்ற நிலையில் அவரது மகன் ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் விருப்பமுள்ளவர் என்பது

கமல்ஹாசனின் 'தக்ஃலைப்' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்? என்ன காரணம்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்ஃலைப்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர் ஒருவர்

சிம்பு டிராப் செய்த 'கொரோனா குமார்' படத்தில் நடிப்பது இவரா? ஆச்சரிய தகவல்..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிக்க இருப்பதாக 'கொரோனோ குமார்' என்ற திரைப்பட அறிவிப்பு வெளியானது என்பதும் ஆனால் அதன் பின்னர் அந்த படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை மறந்துவிட்டீர்களா? யுவனுக்கு ஆர்கே சுரேஷ் பதில்..!

ஆர் கே சுரேஷ் தயாரித்து நடித்து இயக்கும் 'தென் மாவட்டம்' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.