பேருந்தில் பெண் பயணிகளை முறைத்து பார்த்தால் கைது: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- IndiaGlitz, [Saturday,August 20 2022]
பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளை முறைத்துப் பார்த்தாலோ, தொந்தரவு செய்தாலோ விசிலடித்து அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறையிடம் புகார் கொடுக்கலாம் என்றும் அல்லது பேருந்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட பயணிகளை இறங்கி விடலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வாகன போக்குவரத்து விதிமுறைகள் திருத்தங்கள் செய்யப்பட்டு அந்த திருத்தம் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணியை முறைத்து பார்ப்பது, கூச்சலிடுவது, விசிலடிப்பது, கண் சிமிட்டுவது போன்ற பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
பெண் பயணிகளை எரிச்சல் அடையும் வகையில் ஆண் பயணிகள் ஈடுபட்டால் நடத்துனர் உடனே அந்த பயணியை பேருந்திலிருந்து இறங்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று காவல்துறையினர் அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் பெண் பயணிகள் பேருந்துகளில் ஏறும் போது அல்லது இறங்கும் போது அவரை தவறான நோக்கத்தில் தொடக்கூடாது என்றும் பேருந்தில் பயணம் செய்யும் சக பயணிகளுக்கு எரிச்சலூட்டும் காரியத்தில் ஈடுபடக்கூடாது என்றும் அரசு வாகனத்தில் புகார் புத்தகங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.