பெண் உசேன்போல்ட் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சி வீராங்கனை… குவியும் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர் என்பவர் இந்தியாவின் பெண் உசேன் போல்ட் என அழைக்கப்பட்டு வரும் பி.டி.உஷாவின் 23 வருட சாதனையை முறியடித்து அசத்தியிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தின் கூடுர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி. சிறிய வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். மேலும் தடகள விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு முறையான பயிற்சி கிடைக்காமல் தவித்துவந்த நிலையில் சில தன்னார்வலர்களின் உதவியோடு கடந்த 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். அதன் பயனாக சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் விளையாடிற்கும் இவர் இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மாற்று வீராங்கனையாக மட்டுமே இவருடைய பெயர் சேர்க்கப்பட்டதால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.
மேலும் டோக்கியோவில் இருந்தபோது அவருடைய சொந்த தங்கை இறந்துவிட்ட தகவல்கூட தெரியாமல் கடைசியில் சென்னை விமான நிலையத்தில் அவர் கதறி அழுத காட்சிகளையும் பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு விளையாட்டின்மீது தீராத காதல் கொண்ட தனலட்சுமி தற்போது பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்தியன் கிராணட் பிரிக்ஸ் 1 தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டித் தொடரில் நேற்று 200 மீ பெண்களுக்கான பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் கலந்துகொண்டார். இவரோடு தேசிய வீராங்கனைகளான ஹீமா தாஸ் மற்றும் டூட்டி சந்த் போன்றோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் போட்டிப்போட்ட தனலட்சுமி 20.21 வினாடிகளில் 200 மீ தூரத்தை கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.
23 வருடங்களுக்கு முன்பு பெண் உசேன்போல்ட் என அழைக்கப்படும் பி.டி.உஷா 200மீ தூரத்தை 20.26 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை 20.21 வினாடிகளில் தனலட்சுமி முறியடித்து தற்போது கவனம் ஈர்த்துள்ளார். தேசிய வீராங்கனையான ஹீமா தாஸ் இந்தத் தூரத்தை 20.24 வினாடிகளில் கடந்ததும் குறிப்பிடத்தக்கது.
Hima Das had to settle for silver in the women's 200m race at the Indian Grand Prix 1 2022. She finished 0.24 seconds behind Dhanalakshmi Sekar, a Tokyo Olympian who beat both Hima and Dutee Chand in the same event at the Federation Cup last year. ??????♀️
— Fisto Sports (@FISTOSPORTS) March 15, 2022
?? @martin_josephp pic.twitter.com/HpfHHE9Y77
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com