தமிழகத்தின் நேர்மையான அரசியல்வாதியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. நடிகராகும் தயாரிப்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் நேர்மையான அரசியல்வாதி என்று புகழப்படும் கக்கன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் கக்கன் என்பதும் எளிமைக்கு பெயர் பெற்றவர், கரை படியாத அரசியல்வாதி என்று மக்களால் புகழப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காந்தி முதல் பெரியார் வரை பல அரசியல்வாதிகளின் திரைப்படங்கள் உருவாகிய நிலையில் அந்த வரிசையில் தற்போது கக்கன் வாழ்க்கை வரலாறு உருவாக்கப்படுகிறது.
’நான் என் காதலி சீன் போடுற’, ’இரும்பு மனிதன்’ ஆகிய தமிழ் படங்களையும் ஒரு சில கன்னட படங்களையும் தயாரித்த ஜோசப் பேபி என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியது மட்டுமன்றி இவரே இந்த படத்தில் கக்கன் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கக்கன் அவர்களை பற்றி முழு அளவில் ஆய்வு செய்ததாகவும் அவரது வாழ்க்கை நடந்த பல சுராசிமான சம்பவங்களை இந்த படத்தில் நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
கக்கன் ஒரு தெய்வீகமான மனிதர் என்றும் அப்படிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை படமாக எடுப்பது நான் செய்த அதிர்ஷ்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை பிரபு மாணிக்கம் என்பவர் இயக்கி வருகிறார். தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு வெங்கி ஒலிப்பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டி என்ற ஊரிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் ஜோசப் பேபி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout