தல அஜித்துக்கு பாட்டு எழுதணும்: தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரின் ஆசை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுனர் என்ற புகழைப் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா என்பவர் தல அஜித் அவர்களின் படத்திற்கு அறிமுக பாடலை எழுத வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் தல அஜித்தின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய படத்தின் அறிமுக பாடலை எழுத வேண்டும் என்று நினைத்து சென்னைக்கு ஆட்டோவில் செல்லலாம் என்று நினைத்துள்ளேன்.
தல அஜித் குறித்து ஒரு பாடலும், ஒரு கவிதைப் புத்தகமும் எழுதி உள்ளேன். தலயோட படத்தில் என்னுடைய ஆரம்ப பாடல் வந்தால் அதை நான் செய்த மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். தல ரசிகர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தல அஜித்தின் படத்தில் அறிமுக பாடல் எழுத வேண்டும் என்ற தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான இந்த பெண்ணின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒரு தல ரசிகையாம்.❤#28YrsOfAjithismCDPBlast #Valimai pic.twitter.com/9pQonDkH2o
— Thangam V19 (@ThangamV19) July 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments