இவர்கள் தான் நிஜ ஹீரோக்கள்: சைலேந்திரபாபு வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாடு தீயணைப்பு துறையின் ஐஜியாக இருக்கும் சைலேந்திரபாபு அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே. குறிப்பாக உடற்பயிற்சி குறித்து அவர் தரும் குறிப்புகள் அனைவருக்கும் தேவையான ஒன்று.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் தான் நிஜ ஹீரோக்கள் என்று சைலேந்திரபாபு அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு உயரமான இடத்திலிருந்து தற்கொலைக்கு முயலும் ஒரு நபரை தங்கள் உயிரையும் துச்சமென கருதி அந்த நபரை தீயணைப்பு துறையினர் காப்பாற்றும் காட்சி உள்ளது.
இதுகுறித்து சைலேந்திரபாபு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: உயிர்காக்கும் தீயணைப்பு வீரர்கள். இவர்கள் தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களுக்கு தலைமை என்பதைவிட பெருமை என்ன இருக்க முடியும்? என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர் காக்கும் தீயணைப்பு வீரர்கள். இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களுக்கு தலைமை என்பதைவிட பெருமை என்ன இருக்க முடியும்? Firemen save our lives; they are the real heroes. It is a great honour to be their Director. pic.twitter.com/VDX9r8Mgvb
— Sylendra Babu (@SylendraBabuIPS) August 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments